Monday, November 27, 2017

அன்புள்ள படையல் சொந்தங்களுக்கு வணக்கம்..

நேற்று ( 17.11.2017 ) உடுமலைப்பேட்டை , தேவனூர்புதூர் நாச்சிமுத்துக்கவுண்டர் பழனியம்மாள் நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படையலின் அடுப்பில்லா சமையல் பயிற்சி நடைபெற்றது.

பள்ளி ஆசிரியப்பெருமக்கள் , மாணவச்செல்வங்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படையலின் சிறப்பு மிக்க வரகு அவல் லட்டு மாணவச் செல்வங்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்று மீண்டும் மீண்டும் சுவைத்தனர்..

பீர்கங்காய் சேண்ட்விச் மற்றும் சுவையூட்டிய முளைபயிர் மாணவியருடன் ஆசிரியர்களையும் கவர்ந்தது..

பயிற்சி துவக்கத்தில் இருந்தே மாணவியர்களும் , ஆசிரியர் சிலரும்  ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

சுமார் 300 க்கும் மேற்பட்டோருக்கான இயற்கை உணவினை மாணவிகளே தயாரித்து , அன்புடன் , ஆசையுடன் , அக்கறையாய் , ஆனந்தமாய் தன் சக பள்ளி மாணவியர்களுக்கும் பரிமாறிய விதம் எம்மை மிகவும் நெகிழச்செய்தது.

அரியதொரு வாய்ப்பு வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியை அவர்களுக்கும் , ஏற்பாடு செய்த பள்ளியின் தமிழாசிரியை என் அன்பிற்குரிய திருமதி.உமா ம்மா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

*படையலின் அடுத்த பயிற்சிகள் :*


. 10.12.2017 : சோமனூர் , கோவை

. 24.12.2017 : தேனி

.30.12.2017 : சேலம்

என்றென்றும் நன்றியுடன்..
 இரா.படையல் சிவக்குமார்
87 54 68 94 34
அன்புள்ள படையல் சொந்தங்களுக்கு வணக்கம்..

கடந்த 25.11.2017  மற்றும் 26.11.2017 ஆகிய தேதிகளில் சென்னை , வளசரவாக்கம் , ACACIA Homes சார்பில் படையலின் No Boil - No Oil பயிற்சி மிகச்சிறப்பாய் நடைபெற்றது.

இரண்டு நாட்களிலும் 30 க்கும் மேற்பட்ட இயற்கை உணவு வகைகள் செயல் முறை விளக்கத்துடன் சமைத்து விருந்து படைக்கப்பட்டது.

60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மேலும் உணவு மருத்து முறைகள் மற்றும் காய்கறி மருத்துவ முறைகளை பற்றி தெளிவாக , விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நல்லதொரு நிகழ்வை ஏற்பாடு செய்த ACACIA Homes , திருமதி. சங்கீதா அவர்கள் , மற்றும் திருமதி. திலகவதி ஆகியோர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்...

அடுத்த படையல் பயிற்சி வகுப்புகள் :

1. 10.12.2017 : சோமனூர்

2. 24.12.2017 : தேனி

3. 28.12.2017 : சென்னை

4. 30.12.2017 : சேலம்

என்றென்றும் நன்றியுடன்..
இரா.படையல் சிவக்குமார்
87 54 68 94 34













Sunday, November 19, 2017

அன்புள்ள படையல் சொந்தங்களுக்கு வணக்கம்.. நேற்று ( 17.11.2017 ) உடுமலைப்பேட்டை , தேவனூர்புதூர் நாச்சிமுத்துக்கவுண்டர் பழனியம்மாள் நினைவு...