Monday, November 27, 2017

அன்புள்ள படையல் சொந்தங்களுக்கு வணக்கம்..

நேற்று ( 17.11.2017 ) உடுமலைப்பேட்டை , தேவனூர்புதூர் நாச்சிமுத்துக்கவுண்டர் பழனியம்மாள் நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படையலின் அடுப்பில்லா சமையல் பயிற்சி நடைபெற்றது.

பள்ளி ஆசிரியப்பெருமக்கள் , மாணவச்செல்வங்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படையலின் சிறப்பு மிக்க வரகு அவல் லட்டு மாணவச் செல்வங்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்று மீண்டும் மீண்டும் சுவைத்தனர்..

பீர்கங்காய் சேண்ட்விச் மற்றும் சுவையூட்டிய முளைபயிர் மாணவியருடன் ஆசிரியர்களையும் கவர்ந்தது..

பயிற்சி துவக்கத்தில் இருந்தே மாணவியர்களும் , ஆசிரியர் சிலரும்  ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

சுமார் 300 க்கும் மேற்பட்டோருக்கான இயற்கை உணவினை மாணவிகளே தயாரித்து , அன்புடன் , ஆசையுடன் , அக்கறையாய் , ஆனந்தமாய் தன் சக பள்ளி மாணவியர்களுக்கும் பரிமாறிய விதம் எம்மை மிகவும் நெகிழச்செய்தது.

அரியதொரு வாய்ப்பு வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியை அவர்களுக்கும் , ஏற்பாடு செய்த பள்ளியின் தமிழாசிரியை என் அன்பிற்குரிய திருமதி.உமா ம்மா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

*படையலின் அடுத்த பயிற்சிகள் :*


. 10.12.2017 : சோமனூர் , கோவை

. 24.12.2017 : தேனி

.30.12.2017 : சேலம்

என்றென்றும் நன்றியுடன்..
 இரா.படையல் சிவக்குமார்
87 54 68 94 34

No comments:

Post a Comment

அன்புள்ள படையல் சொந்தங்களுக்கு வணக்கம்.. நேற்று ( 17.11.2017 ) உடுமலைப்பேட்டை , தேவனூர்புதூர் நாச்சிமுத்துக்கவுண்டர் பழனியம்மாள் நினைவு...